சிறுவன் தாரிக்கை பிடித்தோம் ஆனால் அடிக்கவில்லை: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Friday, 5 June 2020

சிறுவன் தாரிக்கை பிடித்தோம் ஆனால் அடிக்கவில்லை: பொலிஸ்


தர்கா நகரில் கடந்த மே மாதம் 25ம் திகதி மாலை தாரிக் எனும் மூளை வளர்ச்சி குன்றிய சிறுவன் மீதான பொலிசாரின் அடாவடி குறித்து பல மட்டங்களில் தற்போது பேசப்பட்டு வரும் நிலையில் சிறுவனைப் பிடித்தோம் ஆனால் அடித்துத் துன்புறுத்தவில்லையென தெரிவிக்கிறது ஸ்ரீலங்கா பொலிஸ்.  

பொலிசாரின் கட்டளையை மீறி துவிச்சக்கர வண்டியில் சென்ற சிறுவனைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கையே எடுக்கப்பட்டதாகவும் தாக்குதல் எதுவும் நடாத்தவில்லையெனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், பொலிசார் தவிரவும் அப்பகுதியால் முச்சக்கர வண்டியில் சென்ற நபரும் இறங்கி வந்து குறித்த சிறுவனை மடக்கிப் பிடித்துத் துன்புறுத்திய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. இதேவேளை, சிறுவனுக்கு மூளை வளர்ச்சி குறைவு என்பதை அறிந்ததும் பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லாமல் தந்தையிடம் ஒப்படைத்து விட்டதாகவும் பொலிஸ் தரப்பு விளக்கமளிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment