மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை! - sonakar.com

Post Top Ad

Friday, 19 June 2020

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை!


2011 கிரிக்கட் உலக கிண்ண இறுதிப் போட்டி பணத்தைப் பெற்றுக் கொண்டு விட்டுக் கொடுக்கப்பட்டதாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை, முறைப்பாடு பதிவு செய்யப்பட்டால் தாமும் விசாரணை நடாத்தத் தயாராகவுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிர்வாகம் தெரிவிக்கிறது.

மஹிந்தானந்தவிடம் அவ்வாறான குற்றச்சாட்டுக்கு ஆதாரமிருந்தால் அதனை அவர் சர்வதேச கிரிக்கட் கவுன்சிலிடம் ஒப்படைத்து விசாரணைக்கு வழி செய்ய வேண்டும் என முன்னாள் தேசிய அணித் தலைவர் குமார சங்கக்கார அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment