ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ஜாமியா நளீமியா மறுப்பு! - sonakar.com

Post Top Ad

Friday, 19 June 2020

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்: ஜாமியா நளீமியா மறுப்பு!


அண்மைக்காலமாக பேருவளை ஜாமியா நளீமியா பற்றிய அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு வருவதாகவும் அவற்றை முற்றாக நிராகரிப்பதாகவும் ஜாமியா நளீமியா சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து தசாப்தங்களாக, அறிவார்ந்த அணுகுமுறையும், பரந்த நோக்கும், ஆன்மீக பண்பாட்டு பயிற்சியும் கொண்ட அறிஞர் பரம்பரையொன்றை உருவாக்கும் நோக்கில் இயங்கி வரும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தைப் பற்றி வீண் புரளிகளும், கட்டுக்கதைகளும் பரப்பப்பட்டு வருவதாக அறிக்கையூடாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நளீமியாவின் பட்டதாரிகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், கட்டுக்கோப்பான கல்வித் திட்டம் ஊடாகப் பயிற்சி பெற்று வந்தவர்கள் என்ற அடிப்படையில் நளீமிக்கள் நடுநிலைச் சிந்தனையும் சமநிலைப் போக்கையும் தமது அடிப்படைச் சித்தார்ந்தமாகக் கொண்டவர்கள் எனவும் நளீமியா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment