கருணா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஒமல்பே தேரர் - sonakar.com

Post Top Ad

Tuesday 30 June 2020

கருணா தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்: ஒமல்பே தேரர்

https://www.photojoiner.net/image/zkMn8s6X

ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த கருணா அம்மானை எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் ஒமல்பே சோபித தேரர்.

இலங்கை சட்டவிதிகளுக்கமைவாக கருணா அம்மானுக்கு மரண தண்டனை வழங்கப்பட முடியும் எனவும் இப்பேற்பட்ட ஒரு நபரை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனவும் அவர் சார்ந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எனினும், கருணா அம்மானின் பேச்சைப் பொருட்டிலெடுக்க வேண்டிய அவசியமில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் அத தெரண போன்ற ஊடகங்கள் குறித்த சர்ச்சையை மறைப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment