மொரட்டுவ விவகாரம்: பிரதான சந்தேக நபர் சுட்டுக் கொலை - sonakar.com

Post Top Ad

Sunday, 7 June 2020

மொரட்டுவ விவகாரம்: பிரதான சந்தேக நபர் சுட்டுக் கொலை


மொரட்டுவ, சொய்சா புர பகுதி உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடாத்தி, பொலிசார் முன்னிலையிலேயே துப்பாக்கிப் பிரயோகம் செய்த பாதாள உலக கோஷ்டியின் பிரதான சந்தேக நபர் இன்று காலை மினுவங்கொடயில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரவிக்கின்றனர்.

50 வயதான, கொனா கோவில் ராஜா என்ற புனைப்பெயரால் அழைக்கப்பட்டு வந்த பத்திரனகே ராஜா விமலதர்ம எனும் நபரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை நகர சபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா கொலை முயற்சி உட்பட பல கொலைகளுக்காக தேடப்பட்டு வந்த குறித்த நபர் குடு அஞ்சு எனும் பாதாள உலக பேர்வழியின் சகா என பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.

No comments:

Post a Comment