ஜனாதிபதி செயலணி உருவானதிலிருந்து தொடர் கொலைகள்: நலிந்த - sonakar.com

Post Top Ad

Wednesday, 17 June 2020

ஜனாதிபதி செயலணி உருவானதிலிருந்து தொடர் கொலைகள்: நலிந்த


விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச உருவாக்கிய ஜனாதிபதி செயலணி வந்த பின்னர் தொடர் கொலைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கிறார் ஜே.வி.பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ.

குறித்த செயலணி உருவான சில தினங்களிலேயே முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு நியாயம் பேசச் சென்ற ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்ததோடு, மிஹின் லங்கா மற்றும் ஸ்ரீலங்கன் ஊழல்களைக் வெளிக் கொண்டு வந்த நபர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.

இவ்வாறு தொடர் கொலைகள் இடம்பெறுவதன் ஊடாக இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment