கொரோனா சூழ்நிலையில்லாவிடின் காபந்து அரசாங்கம் இந்நேரம் முடிவுக்கு வந்திருக்கும் என தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
கொரோனாவின் பயனாலேயே ஆட்சி நீடித்து வருகிறது எனவும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தல் ஊடாக அதற்கொரு முடிவு வரும் எனவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னைய ஆட்சியில் வெள்ளை வேன் சாரதிகளாக பணியாற்றியதாகக் கூறிய இருவரை செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் ராஜித அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment