மீராவோடை இளைஞன் நீரில் மூழ்கி மரணம் - sonakar.com

Post Top Ad

Sunday, 28 June 2020

மீராவோடை இளைஞன் நீரில் மூழ்கி மரணம்


நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் மரணமடைந்த சம்பவமொன்று இன்று (28) ஞாயிற்றுக்கிழமை மாலை, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை – புளியடித் துறை எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தோடு சென்ற இளைஞன் ஆற்றில் நீராடும் போது நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார். மிக நீண்ட நேரத்திற்குப் பின்னர் ஆற்றிலிருந்து இளைஞனின் உடல் மீட்கப்பட்டது.

வாழைச்சேனை – செம்மண்ணோடையைச் சேர்ந்த பதினேழு வயதுடைய பெளசுல் பாகிம் என்பவரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்த குறித்த இளைஞனின் உடல் பிரதே பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

No comments:

Post a Comment