கருணா 'அப்படிச்' சொன்னது பெரிய விடயமில்லை: மஹிந்த - sonakar.com

Post Top Ad

Sunday, 28 June 2020

கருணா 'அப்படிச்' சொன்னது பெரிய விடயமில்லை: மஹிந்த


ஒரே இரவில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரைக் கொன்றொழித்ததனால் தான் கொரோனாவை விட கொடியவன் என அண்மையில் கருணா அம்மான் தெரிவித்த கருத்து பெரிது படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமில்லையென தெரிவிக்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.

பிரிவினை கேரரிக்கை மற்றும் கொலை நடவடிக்கைகளைக் கைவிட்டு விட்டோ கருணா தம்மோடு சேர்ந்திருந்ததாகவும் இப்போது அவர் கூறிய சிறு கூற்றொன்றை பெரிது படுத்த அவசியமில்லையெனவும் அவர் விபரித்துள்ளார்.

எனினும், எதிர்க்கட்சியினர் வேட்பாளர்களை திசை திருப்ப இவ்விடயத்தை பெரிதாக்குவதாகவும் கருணா கை விட்டாலும், நல்லாட்சியினர் இன்னும் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் எண்ணத்தைக் கைவிடவில்லையெனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment