தர்கா நகர் சம்பவம்: இன்னும் விசாரணை நடக்கிறதாம்! - sonakar.com

Post Top Ad

Friday 5 June 2020

தர்கா நகர் சம்பவம்: இன்னும் விசாரணை நடக்கிறதாம்!


கடந்த, மே மாதம் 25ம் திகதி மாலை 4.45 - 5 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் மூளை வளர்ச்சி குன்றிய தாரிக் எனும் சிறுவனை அம்பகஹ சந்தியில் வைத்து பொலிசார் தாக்கித் துன்புறுத்திக் கட்டி வைத்திருந்த தகவலை சோனகர்.கொம் வெளியிட்டிருந்தது. https://www.sonakar.com/2020/05/blog-post_235.html

இப் பின்னணியில், பல அரசியல்வாதிகள் இதில் ஆர்வம் காட்டியதுடன் சிறுவனின் வீட்டுக்கும் சென்று வரும் நிலை தொடர்கிறது. இதேவேளை, இவ்விவகாரத்தை தற்போது சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் குமார் சங்கக்கார போன்ற விளையாட்டு வீரர்களும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக்கியுள்ளனர். எனினும், பொலிசார் இதுவரை தாம் 'விசாரணை' நடாத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

10 நாட்கள் கழிந்துள்ள நிலையில், பொலிசாரின் தாக்குதலுக்குள்ளாகி காயப்பட்ட சிறுவனின் மருத்துவ அறிக்கை வரும் வரை காத்திருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது. குறித்த சம்பவத்தை 26ம் திகதி காலையிலேயே முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பதில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டிருந்த அதேவேளை, நேற்றைய தினம் முன்னாள் அமைச்சர் அலி சாஹிர் மௌலானா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் சிறுவனை நேரில் சென்றும் பார்வையிட்டுள்ளனர்.

ஹர்ஷ டி சில்வா உட்பட மேலும் சில அரசியல்வாதிகளை இவ்விவகாரத்தைக் கண்டித்திருந்த நிலையில் நேற்று நாமல் ராஜபக்சவும் தாம் 'கண்டனம்' வெளியிடுவதாக தெரிவித்திருந்தார். எனினும், இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காத ஸ்ரீலங்கா பொலிஸ், இன்னும் மருத்துவ அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment