தர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்! - sonakar.com

Post Top Ad

Tuesday, 26 May 2020

தர்கா நகர்: அப்பாவி சிறுவனை கட்டி வைத்து அடித்த பொலிஸ்!


அளுத்கம, தர்கா நகர் பகுதியில்  வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த மூளை வளர்ச்சி குன்றியதாக அறியப்படும் முஸ்லிம் சிறுவனை பொலிசார் கட்டி வைத்து அடித்த சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (25) மாலை வேளையில் அம்பகஹ சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் அருகில் உள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகியுள்ள அதேவேளை, பொலிசார் மாத்திரமன்றி அப்பகுதியில் ஆட்டோவில் சென்ற ஒருவரும் இறங்கி தாக்கியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இது குறித்து நேற்று இரவு வேளையில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலியிடம் பிரதேச மக்கள் தகவல் தெரிவித்ததையடுத்து அவர் பதில் பொலிஸ் மா அதிபரைத் தொடர்பு கொண்டு இது பற்றி முறையிட்டுள்ளார்.

இப்பின்னணியில் இன்றைய தினம் பாதிக்கப்பட்ட ஏழைச் சிறுவனின் தந்தையை பொலிசார் அழைத்துச் சென்று விசாரணை நடாத்தியுள்ளதுடன் இம்முறை கேட்டில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்துள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவத்தை மூடி மறைக்குமாறு பிரதேசத்தின் பெரமுன சார்பு முஸ்லிம் அரசியல்வாதியொருவர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் சோனகர்.கொம்முக்கு தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment