குவைத்திலிருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Monday, 1 June 2020

குவைத்திலிருந்து நாடு திரும்பிய மேலும் ஒருவர் மரணம்


குவைத்திலிருந்து நாடு திரும்பி, கொரோனா தொற்றுக்குள்ளானதன் பின்னணியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரே இன்று அதிகாலை 2.30 அளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

45 வயதான குறித்த நபர், கடந்த மூன்று தினங்களாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் இலங்கையில் 11 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment