பெரமுனவுக்கு 153 ஆசனங்கள்: SB ஆரூடம்! - sonakar.com

Post Top Ad

Sunday 21 June 2020

பெரமுனவுக்கு 153 ஆசனங்கள்: SB ஆரூடம்!


எதிர்வரும் பொதுத் தேர்தலில் 77 லட்சம் வாக்குகளைப் பெற்று பொதுஜன பெரமுன கூட்டணி 153 ஆசனங்களைக் கைப்பற்றும் என ஆரூடம் வெளியிட்டுள்ளார் எஸ்.பி. திசாநாயக்க.

மஸ்கெலியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், ஜனாதிபதி தேர்தலில் கிடைத்ததை விட 8 லட்சம் வாக்குகள் அதிகம் கிடைக்கும் என விளக்கமளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமுற்றுள்ள நிலையில் பெரமுன கூட்டணியின் வெற்றி உறுதியென அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment