எதிர்வரும் பொதுத் தேர்தல் ஊடாக கோட்டாபே ராஜபக்சவின் தலைமையில உருவான வியத்கம குழுமத்திலிருந்து 11 பேர் நாடாளுமன்றில் எதிர்பார்க்கப்படுவதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
பொதுஜன பெரமுன ஊடாக ஒன்பது வேட்பாளர்கள் இவ்வமைப்பின் சார்பில் போட்டியிடுவதோடு இரு தேசிய பட்டியல் ஆசனங்கள் உள்ளடங்கலாக 11 பேரைத் தாம் எதிர்பார்ப்பதாக அவ்வமைப்பு தெரிவிக்கிறது.
ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்சவின் வெற்றிக்காக இவ்வமைப்பினர் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்ததோடு ஏலவே பலருக்கு அரச பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment