கொரோனா எப்போது நீங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது: WHO - sonakar.com

Post Top Ad

Thursday 14 May 2020

கொரோனா எப்போது நீங்கும் என்று யாராலும் சொல்ல முடியாது: WHO


கொரோனா வைரஸ் பாதிப்பு எப்போது நீங்கும் என யாராலும் உறுதியாக சொல்ல முடியாது என தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் அவசர சூழ்நிலைகளுக்கான பணிப்பாளர் மருத்துவர் மைக் ரயன், சிலவேளை கொரோனாவுடனேயே வாழ்க்கை தொடரவும் கூடும் என விபரித்துள்ளார்.

எச்.ஐ.வி உலகை விட்டு இன்னும் நீங்கவில்லை, அது போலவே கொரோனாவும் தொடர்ந்து நீடிக்கலாம் என எச்சரித்துள்ள அவர், தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டாலும் கூட வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த பாரிய அளவிலான கூட்டு முயற்சிகள் தேவைப்படுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment