அமெரிக்காவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலுமாக இச்செய்தி பிரசுரிக்கப்படும் வேளையில் மொத்த மரணங்களின் எண்ணிக்கை 102,000த்தை எட்டியுள்ளது.
உலகளாவிய ரீதியில் இதுவரை 357,467 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்காவின் எண்ணிக்கை 102,107ஆக பதிவாகியுள்ளது.
உலகில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5.7 மில்லியன் என்கின்ற அதேவேளை அதில் 30 வீதம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment