திடீரென கொரோனா தொற்று அதிகரித்தாலன்றி இந்த வார இறுதியில் நாடளாவிய ஊரடங்கை அமுலுக்குக் கொண்டு வருவதற்கு எவ்விதத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லையென அறியமுடிகிறது.
தற்சமயம் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையான காலப்பகுதியிலேயே ஊரடங்கு அமுலில் உள்ள அதேவேளை 20 நாட்களுக்கு அதிகமாக சமூக மட்டத்திலான கொரோனா தாக்கம் எதுவும் கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குத் திரும்பியவர்கள் மற்றும் கடற்படையினரே தொடர்ந்தும் தொற்றுக்குள்ளாகி வருவதாக கடந்த சில நாட்களாக தெரிவிக்கப்படுகிறது. இறுதியாக கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் நாடளாவிய ஊரடங்கு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment