US பிரஜாவுரிமை நீக்கம்: புதிய பட்டியலில் ஜனாதிபதியின் பெயர் - sonakar.com

Post Top Ad

Friday 8 May 2020

US பிரஜாவுரிமை நீக்கம்: புதிய பட்டியலில் ஜனாதிபதியின் பெயர்


அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டோரின் பெயர்கள் அடங்கிய புதிய பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளது.



கடந்த காலத்தில் தனது அமெரிக்க பிரஜாவுரிமையைக் கைவிட்டு விட்டதாக அவர் தெரிவித்திருந்த போதிலும், இதுவரை வெளியிடப்பட்ட பட்டியல்களில் அவரது பெயர் இடம்பெறாத காரணத்தினால் தொடர்ந்தும் இவ்விடயத்தில் சந்தேகம் நிலவி வந்தது.

இந்நிலையில், இன்றைய தேதியிட்டு (மே மாதம் 8ம்திகதி) வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment