
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை செய்தியாளர் சந்திப்பில் அறிமுகப்படுத்தியதன் பின்னணியில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜிதவிடம் கொரோனா தொற்று பற்றி அவர் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையிலும் இன்று விசாரணை இடம்பெறவுள்ளது.
மார்ச் நடுப்பகுதியில் நாட்டில் கொரோனா தொற்று தொடர்பில் ராஜித வெளியிட்ட தகவல்களைக் கொண்டே இவ்விசாரணை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.
கொரோனா தொற்றுக்குள்ளானோரின் உடலங்களை எரிப்பது தொடர்பிலும் ராஜித விசனம் வெளியிட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.
No comments:
Post a Comment