மஹிந்தவின் கூட்டம்: சஜித் தரப்பும் நிராகரிப்பு! - sonakar.com

Post Top Ad

Saturday, 2 May 2020

மஹிந்தவின் கூட்டம்: சஜித் தரப்பும் நிராகரிப்பு!

https://www.photojoiner.net/image/jNUDQV3c

நாடாளுமன்றைக் கூட்டி நாட்டின் அவசர நிலைமையை ஆராய்வதற்குப் பகரமாக மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் எதிர்வரும் திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டத்துக்கான அழைப்பை நிராகரித்துள்ளது சஜித் பிரேமதாசவின் சமகி பலவேகய.

ஏலவே ஜே.வி.பியினர் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலம் தெரிவித்துள்ள நிலையில் சஜித் தரப்பும் தாம் கலந்து கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ளது. எனினும், நாடாளுமன்றைக் கூட்டுமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்றை மீண்டும் கூட்டப் போவதில்லையென ஜனாதிபதி இரு தடவைகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment