ஜாஎல: குணமடைந்து வந்த நபருக்கு மீண்டும் கொரோனா - sonakar.com

Post Top Ad

Saturday, 2 May 2020

ஜாஎல: குணமடைந்து வந்த நபருக்கு மீண்டும் கொரோனா


கொரோனா தொற்றுக்குள்ளாகி ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து விட்டதாக வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் மீண்டும் கொரோனா தாக்கத்திற்கான அறிகுறிகளோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஜாஎல பகுதியிலிருந்து கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர், ஒரு மாத சிகிச்சைக்குப் பின் ஏப்ரல் 17 அளவில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்தும் வீட்டில் தனிமைப்படுத்தலைத் தொடர்ந்திருந்த நிலையில், நெஞ்சுவலி காரணமாக பரிசோதனைக்குச் சென்ற இடத்தில் மீண்டும் கொரோனா தாக்கத்திற்குள்ளானமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் மீண்டும் ஐ.டி.எச்சில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment