நாமல் - யோசித்த மஹேலவுக்கு ஆதரவு! - sonakar.com

Post Top Ad

Tuesday 19 May 2020

நாமல் - யோசித்த மஹேலவுக்கு ஆதரவு!

https://www.photojoiner.net/image/z3ZA8U0d

இலங்கையில் புதிதாக கிரிக்கட் மைதானம் ஒன்று அமைப்பதற்கான அரசின் திட்டத்தை நேற்றைய தினம் முன்னாள் இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைவர் மஹேல ஜயவர்தன கேள்விக்குட்படுத்தியிருந்த நிலையில் அது பேசுபொருளாகியுள்ளது.

இப்பின்னணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் நாமல் ராஜபக்சவும் யோசித்த ராஜபக்சவும் மஹேலவின் கேள்வி நியாயமானது என வழிமொழிந்துள்ளதுடன் தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறு ஒரு திட்டம் அவசியமில்லையென தெரிவிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கட் கவுன்சிலின் உதவியுடனேயே குறித்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பந்துல குணவர்தன விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment