வாகனேரி: சட்டவிரோத மணல் அகழ்வாளர்களை தடுக்க முனைந்ததால் சர்ச்சை - sonakar.com

Post Top Ad

Friday 29 May 2020

வாகனேரி: சட்டவிரோத மணல் அகழ்வாளர்களை தடுக்க முனைந்ததால் சர்ச்சை

https://www.photojoiner.net/image/c489xDZk

மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட வாகனேரி குளத்துமடு பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தவர்களை தடுக்க முயன்ற நிலையில் ஏற்பட்ட கைகலப்பு விவகாரத்தை இனப்பிரச்சினையாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக பிரதேசத்தில் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இச்சூழ்நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக விசாரித்து இரு தரப்பையும் சந்தித்து பேசி ஒரு சமாதான நிலையினை உருவாக்கும் நோக்கத்தோடு முதல் கட்டமாக ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எஸ்.கிருபா, குளத்துமடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.பார்த்திபன், வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எஸ்.காசினாதன் மற்றும் வாகனேரி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் எஸ்.ஓவியராஜா ஆகியோர் உள்ளடங்கிய குழுவினரை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கிறார் சட்டத்தரணி ஹபீப் றிபான்.

சம்பவத்தில் 11 பேர் காயமுற்றுள்ள நிலையில் தாக்குதல்களை நடாத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவிக்கிறார்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment