எங்களைப் போல் யாரும் நிவாரணம் கொடுத்ததில்லை: மஹிந்தானந்த - sonakar.com

Post Top Ad

Tuesday, 5 May 2020

எங்களைப் போல் யாரும் நிவாரணம் கொடுத்ததில்லை: மஹிந்தானந்த


நடைமுறை அரசைப் போன்று இதற்கு முன் எந்த ஒரு அரசும் மக்களுக்கு நிவாரணம் வழங்கியதில்லையென தெரிவிக்கிறார் மஹிந்தானந்த அளுத்கமகே.5000 ரூபா கொடுப்பனவு பாரிய சமூகச் சிக்கலை உருவாக்கியுள்ளதுடன் பெரும்பாலான இடங்களில் அதுவும் கிடைக்கவில்லையென மக்கள் அங்கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், 5000 ரூபா கொடுப்பனவு ஒரு குடும்பத்துக்கு, ஒரு மாதத்துக்கு எவ்விதத்திலும் போதாது என சஜித் கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்குமுகமாகவே மஹிந்தானந்த இவ்வாறு தெரிவித்துள்ளதுடன் மின்சார கண்டணம், தண்ணீர் கட்டணம், வங்கிக் கடன்கள் என எதுவும் தற்போது செலுத்த வேண்டிய அவசியமில்லையென அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்த அரசைப் போன்று மக்களுக்கு வாரி வழங்கும் அரசொன்று உலகில் எங்குமே இல்லையெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment