வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம் - sonakar.com

Post Top Ad

Sunday 31 May 2020

வாழைச்சேனை கடதாசி ஆலையின் பரீட்சாத்த உற்பத்தி ஆரம்பம்


வாழைச்சேனை கடதாசி ஆலையியில் இன்று பரீட்சாத்த நடவடிக்கைகள் ஆரம்பிப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் விரவன்ச தெரிவித்தார்.

பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை கடதாசி ஆலையில் ஜனாதிபதி கோட்டாபாயாவின் ஆலோசனைக்கமையவும் பிரதமர் மஹிந்தராஜபக்ஸவின் வழிகாட்டலிலும் இன்று பரீட்சாத்த நடவடிக்கையாக அட்டை தயாரிக்கும் இயந்திரம்   இயங்க வைக்கும் நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக இருந்த றிஸாட் பதியுதீனிடம் இவ் ஆலையை மீண்டும் இயங்க வைப்பதற்கு கடதாசி ஆலையின் ஊழியர்கள் பல தடவைகள் முயற்சிகள் மேற்கொண்டும் அது பலன் இல்லாமல்போன நிலையில் தற்போதைய அரசாங்கத்தின் முயற்சியினால் இன்று பரீட்சாத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் தொடராக கடதாசி ஆலை முழுமையாக இயங்கப்படவுள்ளதுடன் வேலைவாய்ப்புக்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கடதாசி ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க, அமைச்சின் உயர் அதிகாரிகள், வாழைச்சேனை கடதாசி ஆலையின் பதில் முகாமையாளர் எஸ்.அம்பிகாவதி உள்ளிட்ட பலர் பலந்து கொண்டனர்.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment