ஊரடங்கு நீங்கினாலும் 'கூட்டம்' சேரத் தடை - sonakar.com

Post Top Ad

Sunday, 24 May 2020

ஊரடங்கு நீங்கினாலும் 'கூட்டம்' சேரத் தடைநாளையோடு நாடளாவிய ரீதியில் இரவு வேளைகளில் மாத்திரமே ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ள போதிலும் தொடர்ந்தும் 'கூட்டம்' சேர்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் டி.ஐ.ஜி அஜித் ரோஹன.

அண்மையில் மாளிகாவத்தையில் இடம்பெற்றது போன்ற சிக்கல்கள் மீண்டும் இடம்பெறாமல் இருப்பதன் அடிப்படையில் மேலதிக கவனம் தேவைப்படுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நாளை மறுதினம் செவ்வாக்கிழமையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment