இந்தியா: ஒரே நாளில் 7694 கொரோனா தொற்றாளர்கள்! - sonakar.com

Post Top Ad

Saturday 30 May 2020

இந்தியா: ஒரே நாளில் 7694 கொரோனா தொற்றாளர்கள்!


இந்தியாவில் ஒரே நாளில் 7694 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனா பரவல் தொடாபில் மேலும் அவதானம் செலுத்தப்படுகிறது.

கடந்த வாரத்திற்குள் அதிகளவான பரிசோதனைகளை இந்தியா மேற்கொண்டு வரும் நிலையில் இவ்வாறு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு ஒரு லட்சம் மாதிரிகளை பரிசோதிப்பதாக இந்தியா நேற்றைய தினம் தகவல் வெளியிட்டிருந்த நிலையில் இவ்வாறு ஒரே நாளில் 7694 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதுவரை 82,000 பேர் குணமடைந்துள்ளதுடன் 4971 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment