மேல் மாகாணத்திலிருந்து 20000 பேர் இரகசியமாக வெளியேறியுள்ளனர் - sonakar.com

Post Top Ad

Monday, 18 May 2020

மேல் மாகாணத்திலிருந்து 20000 பேர் இரகசியமாக வெளியேறியுள்ளனர்


கொரோனா சூழ்நிலையின் பின்னணியில் மேல் மாகாணத்தில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளையும் மீறி சுமார் 20,000 பேர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கம்பஹா போன்ற இடங்களில் இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த அதேவேளை மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், 20,000 பேர் வரை இரகசியமாக சொந்த இடங்களுக்குத் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment