UK: பத்தாயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணம்! - sonakar.com

Post Top Ad

Saturday, 11 April 2020

UK: பத்தாயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணம்!


ஐக்கிய இராச்சியத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இச் செய்தி எழுதப்பட்ட வேளையில் இன்றைய தினம் மாத்திரம் 917 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்தமாக 9875 பேர் கொரோனா வைரசுக்குப் பலியாகியுள்ளனர்.


எனினும், ஏனைய நாடுகள் போன்று கடுமையான கட்டுப்பாடுகள் ஐக்கிய இராச்சியத்தில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லையென்பதோடு கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியாகியுள்ளார்.

கடந்த சில தினங்களாக நாளாந்தம் 800 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment