
ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில் மாத்திரமே அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்ய வெளியில் செல்ல முடியும் என விளக்கமளித்துள்ளனர் பொலிசார்.
இதனடிப்படையில், தேசிய அட்டையாள இலக்கத்தின் முடிவிலக்கத்தைக் கொண்டு வாரத்தின் எந்த நாளில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட இடங்களில், அத்தியவாசிய பொருட்கள் கொள்வனவுக்காக மக்கள் வெளியில் செல்ல முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய அடையாள அட்டை இலக்கம் 1 அல்லது 2 ஆகிய இலக்கங்களில் முடிவுறின் திங்கட்கிழமையும், 3 அல்லது 4 எனின் செவ்வாய்க்கிழமையும், 5ம் 6ம் புதன், 7ம் 8ம் வியாழன் மற்றும் 9 மற்றும் 0 ஆகிய இலக்கங்களில் நிறைவுறின் வெள்ளிக்கிழமையே வெளியில் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment