முன்னாள் MPக்களை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேச முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

முன்னாள் MPக்களை அலரி மாளிகைக்கு அழைத்துப் பேச முஸ்தீபு


நாடாளுமன்றை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ள நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை அலரி மாளிகைக்கு அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்த ஏற்பாடாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இன்று பிற்பகல் மஹிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் கட்சித் தலைவர்கள் சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில், அதற்குப் பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களோடும் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பறம் மற்றும் சலுகைகளுக்காகவே எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றைக் கூட்டச் சொல்வதாக மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment