அட்டுலுகம - பேருவளை - அக்குரணைக்கு செல்ல முனைபவர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை - sonakar.com

Post Top Ad

Saturday, 4 April 2020

அட்டுலுகம - பேருவளை - அக்குரணைக்கு செல்ல முனைபவர்களுக்கு பொலிஸ் எச்சரிக்கைகொரோனா வைரஸ் பரவலின் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  அக்குரணை, அட்டுலுகம மற்றும் பேருவளையின் பகுதிகளுக்கு நடைபாதை அல்லது குறுக்குவழிகளைப் பயன்படுத்தி உள்நுழைய முனைபவர்கள் கைது செய்யப்பட்டால் பிணை வழங்கப்பட மாட்டாது என பொலிசார் எச்சரிக்கின்றனர்.


நாட்டின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடுகையில் குறித்த இடங்களில் கொரோனா பாதிப்புள்ளவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே இருந்தாலும் கூட குறித்த பகுதிகளில் கொரோனா பரவல் அபாயம் அதிகம் இருப்பதாகக் கருதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே குறுக்குவழிகள், நடைபாதைகள், காட்டுப் பாதைகள் என எந்த வகையிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுக்கு செல்ல வேண்டாம் என பொலிசார் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment