ஈஸ்டர் தாக்குதல்: கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை - sonakar.com

Post Top Ad

Tuesday, 21 April 2020

ஈஸ்டர் தாக்குதல்: கொல்லுப்பிட்டி பள்ளிவாசலில் விசேட பிரார்த்தனை

https://www.photojoiner.net/image/EvY8XtJr

கடந்த வருடம் ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தோரை நினைவு கூறுமுகமாக முஸ்லிம் சமய விவகார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனை நிகழ்வு கொல்லுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.அனைத்து சமய பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்த இந்நிகழ்வில், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி விசேட பிரார்த்தனையை நடாத்தியிருந்த அதேவேளை சிங்கள மொழியில் மௌலவி முர்சித் முலாபரது பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளர் பர்சான் மன்சூர் உட்பட முக்கியஸ்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

-அஸ்ரப் ஏ சமத்

No comments:

Post a comment