சிறிய அளவிலேயே இம்முறை வெசக் கொண்டாட்டம் - sonakar.com

Post Top Ad

Monday 27 April 2020

சிறிய அளவிலேயே இம்முறை வெசக் கொண்டாட்டம்

https://www.photojoiner.net/image/GEL2jAtR

மே மாதம் 4 முதல் 8ம் திகதி வரையான வெசக் வாரத்தில் ஹொரண ஸ்ரீஜயவர்தனாராமய பன்சலயில் எளிதான முறையில் சிறிய அளவிலேயே வெசக் கொண்டாட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அதை நாடளாவிய ரீதியில் மக்கள் பார்ப்பதற்கு ஏற்ப தேசிய தொலைக்காட்சிகள் ஊடாக நேரலை செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா சூழ்நிலையில் மக்கள் பாதுகாப்பு கருதி இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பௌத்த விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

இதேவேளை, வீடுகளில் கூடுகள், அன்னதானம் வழங்கல் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-அஸ்ரப் ஏ சமத்

No comments:

Post a Comment