புத்தளம்: அனைத்தின மக்களுக்கும் உதவும் சமூகத் திட்டம்; முடிந்தால் உதவுங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 12 April 2020

புத்தளம்: அனைத்தின மக்களுக்கும் உதவும் சமூகத் திட்டம்; முடிந்தால் உதவுங்கள்!

https://www.photojoiner.net/image/ahi9YDcS

கொரோனா சூழ்நிலையில்  முடங்கிப் போயுள்ள புத்தளம் வாழ் அனைத்தின சமூகத்தாருக்கும் அரச உதவிகள் வந்து சேர்வதில் கால தாமதம் மற்றும் இடையூறுகளும் இருக்கும் நிலையில் எதுவித அரசியல் தலையீடுகளுமின்றி அனைத்தின மக்களுக்கும் உதவக் கூடிய வகையிலான அமைப்பொன்று நேற்றைய தினம் புத்தளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சமூக உறுப்பினர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.புத்தளம் பொலிடிக்ஸ் வட்சப் குழுமத்தின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட அவசர நிதி சேகரிப்பு திட்டத்தில் புத்தளத்தில் மற்றும் வெளிநாடுகளில் வாழும் சமூக ஆர்வலர்கள் பங்களிப்பதற்கு முன் வந்துள்ள நிலையில் இதனை ஒரு சமூக நம்பிக்கை நிதியமாக மாற்றி, பிரதேசத்தில் வாழும் சகலருக்கும் அவசர தேவைகளின் போது உலர் உணவு போன்ற உதவிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாயை சேகரித்து, தலா 3000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகளை பிரதேச மக்களுக்கு விநியோகிப்பதை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தில் புத்தளத்தைச் சேர்ந்த பிரபல சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றிருக்கும் நிலையில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் நல்லுள்ளம் படைத்த அனைவரதும் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர், +94714246949 (Hazri Hafi) , +94758992341 (Hamthan) , +94718066992 (Jakir), +94716922262 (Ilthaf), +94753375750 (Rinoos) மற்றும்  +96566595164 (Riyas - Kuwait) ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறீர்கள்.

அல்லது, நேரடியாக நிதியுதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் வங்கிக் கணக்கிலக்கத்துக்கு உங்கள் உதவிகளை அனுப்பி வைக்கலாம்.

A/c Name: A.S.M. Rinawus
A/C No: 001 0258945001
Bank: Amana Bank
Branch: Puttalam

Pz4HVNa
- றவூப் நிஸ்த்தார் - சட்டத்தரணி (லண்டன்)
இணை ஆசிரியர், சோனகர்.கொம்

No comments:

Post a comment