அக்குரணை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்! - sonakar.com

Post Top Ad

Friday, 10 April 2020

அக்குரணை: கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நபர் குணமடைந்தார்!


கண்டி மாவட்டம், அக்குறணையில் இருந்து கொரோனா தொற்றுக்கு உள்ளன நபரின் குடும்பத்தினர் சிலர், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பது அடையாளம் காணப்பட்டு, ஐ டீ எச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே. 


குறித்த நபரின் மகன் ஒருவர் ஐ டி எச் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமாகி நேற்று வீடு வந்து சேர்ந்துள்ளார். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற ஏனையவர்களின் நிலைமை குறித்து வினவியபோது, அவர்கள் குணமடைந்து வருவதாகவும் இன்னும் ஒரு சில தினங்களில் அவர்களும் பூரண குணமடைந்து வெளியே வரலாம் என்றும் கண்டி போதனா வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர் எஸ் எம் ரிஸ்வி நம்பிக்கை தெரிவித்தார்.

பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட  அக்குரணை பிரதேசம் மிக விரைவில் விடுதலை செய்யப்பட்டு, அசௌகரியங்களை அனுபவிக்கும் மக்கள் அதிலிருந்து நீங்கி சகஜ வாழ்வுக்குத் திரும்புவதற்கான நிகழ்வுகள் தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்று சகலரையும் பிரார்த்திக்குமாறு UCNC வேண்டிக்கொள்கிறது.

அதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை குறித்த நேரத்தில் அடையாளம் கண்டு, உடனடியாக அவர்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கும், ஏனைய மக்களை பாதுகாப்பதற்கும் சகல ஏற்பாடுகளையும் செய்து தந்து உதவிய கண்டி போதனா வைத்தியசாலை பணிப்பாளர்; டாக்டர் ரத்னாயக்க அவர்களுக்கும், இது விடயத்தில் எதுவித பாரபட்சமும் இன்றி உதவியும், பாதுகாப்பும் அளித்துவரும் வைத்திய, சுகாதாரத் துறையினருக்கும், ஸ்ரீலங்கா போலீசாருக்கும், ராணுவத்தினருக்கும், மக்கள் மீது  பொறுப்புடன் செயல்படும் அரசுக்கும் சமூகத்தின் சார்பாக UCNC நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

-Mohamed Naleer

No comments:

Post a comment