ம'களப்பு: நிர்ணய விலையை மீறிய வியாபாரிகள் கைது - sonakar.com

Post Top Ad

Friday 17 April 2020

ம'களப்பு: நிர்ணய விலையை மீறிய வியாபாரிகள் கைது


மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதில் பன்னிரண்டு வர்த்தகர்களை வியாழக்கிழமை மாலை பிடித்துள்ளதாக கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். 


இந்த சுற்றிவளைப்பில் கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தலைமையில் புலனாய்வு உத்தியோகத்தர்களினான எம்.எம்.எம்.றம்சீன், என்.ஏ.மாஜித், எம்.யூ.எம்.பசீர் ஆகியோரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. 

ஒட்டமாவடி நகரம், வாழைச்சேனை, மிராவோடை, கறுவாக்கேணி, மற்றும் கிரான் ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அரிசி கட்டுப்பாட்டு விலையினை விட அதிக விலைக்கு விற்பனை செய்த  பன்னிரண்டு வர்த்தகர்கள் பிடிபட்டனர். 

குறித்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், பொருட்கள் பறிமுதல் சொய்யப்பட்டன. அரசின் கட்டுப்பாட்டு விலைகளில் சோற்று அரிசி மற்றும் சம்பா ஒரு கிலோ கிராம் தொன்னூறு ரூபாய்கும், பச்சை அரிசி எண்பத்தைந்து ரூபாய்கும், கீரி சம்பா நூற்றி இருபத்தைந்து ரூபாய்கும் விற்பனை செய்ய வேண்டும் என ஏற்கனவே வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியுமான ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்தார். 

இதனை மீறிய வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், தண்டப்பணத்துடன் ஆறு மாத கால சிறைத்தண்டனையும் அனுபவிக்க கூடும் என்பதனை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

எதாவது பால்மா மற்றும் ஏனைய அத்தியாவசியமான பொருட்களை பதுக்களில் வைத்திருக்கும் வியாபாரிகள் இவ்வாறு பதுக்கி வைப்பது கண்டுபிடிக்கப்பட்டால் குறித்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அனைத்துப் பொருட்களும் அரசுடமையாக்கப்படும். மேலும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை சட்டத்தை மீறிய பல வியாபாரிகளுக்கு எதிராக வழக்கும் பதியப்பட்டது. 

மேலும் ஊரடங்கு சட்ட காலப்பகுதில் பொருட்களை அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை மீறி வியாபாரத்தை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கெதிராக பொலிஸாரிடம் முறையிடுமாறு வேண்டிக்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் வியாபாரிகள், அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுவதுடன், அவர்களிடமிருந்து பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்திற்கு வழங்கப்படுவதுடன், பாரபட்சம் பாராமல் வழக்குப் பதிவு செய்யப்படும். 

மாவட்டத்தில் சட்ட ரீதியற்ற முறையில் தனது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்ட வியாபாரிகள் பற்றிய தகவல்களை வழங்கிய நுகர்வோருக்கும் குறிப்பிட்ட நேரத்துக்குள் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு மிகவும் உறுதுணையாக அமைந்ததாகவும் முறைப்பாடுகளை செய்த அனைவருக்கும் நன்றியையும், தங்களது ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பதிகாரியும், கிழக்கு மாகாண உதவிப் பணிப்பாளருமான ஆர்.எப்.அன்வர் சதாத் மேலும் தெரிவித்தார்.

- எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment