ரிசாதின் சகோதரன் - ஹிஜாஸ் இருவருக்கும் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு: பொலிஸ் - sonakar.com

Post Top Ad

Wednesday, 15 April 2020

ரிசாதின் சகோதரன் - ஹிஜாஸ் இருவருக்கும் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு: பொலிஸ்


நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் மற்றும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகிய இருவருக்கும் ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்பிருந்ததாக விளக்கமளித்துள்ளது ஸ்ரீலங்கா பொலிஸ்.நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த போதிலும் சட்டத்தரணி ஹிஜாஸின் கைதின் பின்னணி குறித்து விளக்கமளிக்கப்பட்டிருக்கவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் தாக்குதல்தாரிகள் சார்ந்த அமைப்பிலும் அங்கம் வகித்ததாகவும் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தற்கொலைத் தாக்குதல்தாரியுடன் ரிசாத் பதியுதீனின் சகோதரனுக்கும் தொடர்பிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment