பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக்க எண்ணமில்லை: ஷவேந்திர - sonakar.com

Post Top Ad

Monday, 27 April 2020

பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாக்க எண்ணமில்லை: ஷவேந்திர


கொழும்பின் பிரபல பாடசாலைகள் சில தனிமைப்படுத்தல் முகாம்களாகப் பயன்படுத்தப்படப் போவதாக சமூக வலைத்தளங்களில் உலவும் செய்திகளை மறுதலித்துள்ளார் இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா.முப்படையினரின் விடுமுறைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய முகாம்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் தற்காலிகாக தங்க வைத்து, சுகாதார நடவடிக்கைகளுக்கான பயிற்சிகள் இடம்பெறுமே தவிர பாடசாலைகளை தனிமைப்படுத்தல் முகாம்களாகப் பயன்படுத்தும் எண்ணமில்லையென அவர் விளக்கமளித்துள்ளார்.

எனினும், கொழும்பு ரோயல், மஹனாம, தேர்ஸ்டன், டி.எஸ் உட்பட சில பாடசாலைகள் தனிமைப்படுத்தல் முகாம்களாக்கப்படவுள்ளதாக நேற்று மாலை சமூக வலைத்தளங்களில் பரவலாக தகவல்கள் பரவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment