சஹ்ரான் கும்பலுக்கு மூதூரிலும் முகாம் இருந்ததாக தகவல் - sonakar.com

Post Top Ad

Monday, 27 April 2020

demo-image

சஹ்ரான் கும்பலுக்கு மூதூரிலும் முகாம் இருந்ததாக தகவல்

CPccMnZ

ஈஸ்டர் தாக்குதலை நடாத்திய கும்பலின் பிரதானி சஹ்ரான், மூதூரிலும் இரகசியமாக முகாம் ஒன்றை நடாத்தி வந்ததாக தற்போது தகவல் வெளியிடப்பட்டுள்ளது.



நிகழ்வு நடந்து ஒரு வருட காலத்தின் பின்னர், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பிலான தகவல்கள் வெளியாகி வருவதுடன் கைதுகளும் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், மாவனல்லை புத்தர் சிலைகள் உடைப்பின் பிரதானியாக தேடப்பட்டு, ஈஸ்டர் தாக்குதலின் பின் கைதான சாதிக்கின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இவ்வாறு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

15 ஏக்கர் விவசாய நிலத்தை மிகவும் இரகசியமாக பயிற்சி நடவடிக்கைகளுக்காக பாவித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் புத்தளம் பகுதியில் தென்னந் தோட்டம் ஒன்றில் நடாத்தப்பட்டு வந்த முகாம் முற்றுகையிடப்பட்டு, ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்த நிலையில் சாதிக் மற்றும் சகோதரன் தொடர்புபடுத்தப்பட்டு தேடப்பட்டு வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment