
சுமார் 95 கடற்படையினர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் முப்படையினரின் விடுமுறைகளையும் உடனடியாக இரத்துச் செய்துள்ளது பாதுகாப்பு அமைச்சு.
கடற்படை வீரர் ஒருவரை மணம்புரிந்திருந்த இராணுவப் பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்றிருப்பது கண்டறியப்பட்டிருந்ததையடுத்து அவர் பணியாற்றிய சீதுவ இராணுவ முகாம் மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் அனைத்து தரத்திலுள்ளவர்களும் உடனடியாக தமது முகாம்களுக்குத் திரும்புமாறு பாதுகாப்பு செயலாளர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment