முன்னாள் பிரதியமைச்சர் தனிமைப்படுத்தலில்; தாராபுரத்துக்கு பூட்டு! - sonakar.com

Post Top Ad

Wednesday, 8 April 2020

முன்னாள் பிரதியமைச்சர் தனிமைப்படுத்தலில்; தாராபுரத்துக்கு பூட்டு!வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமாக பதவி வகித்த காதர் மஸ்தானை சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புக்குள்னான நபர் ஒருவர் கலந்து கொண்ட நிகழ்வொன்றில் குறித்த நபரும் கலந்து கொண்டதன் பின்னணியில் இவ்வெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்துக்குரிய தாராபுரம் கிராமத்தையும் தனிமைப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வன்னி மற்றும் மன்னார் சுகாதார அதிகாரிகளின் தகவலின் அடிப்படையில் கொரோனா பாதிப்புக்குள்ளான புத்தளத்தைச் சேர்ந்த நபர் மார்ச் 18ம் திகதியளவிலேயே அப்பகுதிக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a comment