திருடனுக்கு 'கொரோனா'; பிடித்துக் கொடுத்த ஊரார் தனிமைப்படுத்தலில் - sonakar.com

Post Top Ad

Tuesday, 7 April 2020

திருடனுக்கு 'கொரோனா'; பிடித்துக் கொடுத்த ஊரார் தனிமைப்படுத்தலில்


திருட்டில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிசாரிடம் பிடித்துக் கொடுத்த பிரதேசவாசிகள் தம்மைத் தனிமைப்படுத்த நேர்ந்த சம்பவம் ஜாஎலயில் இடம்பெற்றுள்ளது.நேற்று முன் தினம் ஜாஎல, போபிட்டிய பகுதி வீடொன்றில் திருடச் சென்றிருந்த நபர் ஒருவi நவோதய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். எனினும், திருடனுக்கு கொரோனா தாக்கம் இருப்பது பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பின்னணியில், அப்பகுதியைச் சேர்ந்த 62 பேரை தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment