இன்னும் தாமதித்தால் பொருளாதாரம் வீழ்ந்து விடும்: ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Monday, 20 April 2020

இன்னும் தாமதித்தால் பொருளாதாரம் வீழ்ந்து விடும்: ஜனாதிபதி


கொரோனா சூழ்நிலையில் இன்னும் நாட்டை முடக்கி வைத்திருந்தால் பொருளாதாரம் முற்றாக வீழ்ந்து விடும் என தெரிவிக்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


மேல் மாகாணமே நாட்டின் பொருளாதாரத்தில் 50 வீதத்துக்கும் அதிக பங்களிப்பை வழங்குவதாகவும் இந்நிலையில் தொடர்ந்தும் நாட்டை முடக்கி வைத்திருப்பது பொருளாதாரத்துக்கு பாரிய இழப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

நாட்டை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் என பொருளாதார விற்பன்னர்கள் தமக்கு அறிவுரை வழங்கி வந்த நிலையிலேயே கவலையுடன் முடிவெடுத்துள்ளதாகவும் நாட்டில் இன்னும் கொரோனா அபாயம் முற்றாக நீங்கவில்லையெனவும் ஜனாதிபதி தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சியூடாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment