மதுக் கடைகளை திறந்தது தவறான முடிவு: ADIC விசனம் - sonakar.com

Post Top Ad

Monday 20 April 2020

மதுக் கடைகளை திறந்தது தவறான முடிவு: ADIC விசனம்

https://www.photojoiner.net/image/BILzIPoK

கொரோனா அபாயம் குறைந்து விட்டதாகக் கூறி மதுக் கடைகளைத் திறப்பதற்கான முன் கூட்டிய அறிவிப்புடன் நாட்டின் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.



இந்நிலையில், பெரும்பாலான இடங்களில் மதுக்கடைகளில் நீண்ட வரிசையில் மிக நெருக்கமான முறையில் குவிந்து நின்று மக்கள் மதுக் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றமையும் மதுபான சாலைகளில் கூட்டம் நிரம்பி வழிவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில், இலங்கையின் மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் Alcohol and Drug Information Centre (ADIC)  இம்முடிவு தவறானது எனவும் ஜனாதிபதி இதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கையெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மதுபானம் உட்கொள்வோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதோடு வாகன விபத்துகள் அதிகரிப்பு, குடும்ப சண்டைகள் அதிகரிப்பு போன்ற பல சமூக மட்ட காரணங்களை மேற்கொள் காட்டி குறித்த அமைப்பு அரசின் மீள் பரிசீலனையைக் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment