இலங்கையில் சனிக்கிழமை 25ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பம்! - sonakar.com

Post Top Ad

Thursday, 23 April 2020

இலங்கையில் சனிக்கிழமை 25ம் திகதி ரமழான் நோன்பு ஆரம்பம்!


இலங்கையில் சனிக்கிழமை 25ம் திகதி முதலாவது ரமழான் நோன்பினைக் கடைப்பிடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பெரிய பள்ளிவாயலின் பிறைக்குழு , ஜம்மியத்துல் உலமா மற்றும் வக்பு சபை இது தொடர்பில் இன்று கலந்துரையாடியிருந்த நிலையில் ஷஃபான் மாதம் 30 நாட்களுடன் முடிவடையும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பின்னணியில் சனிக்கிழமை முதலாவது நோன்பு கடைப்பிடிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment