ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 20ம் திகதி வரை விளக்கமறியல் - sonakar.com

Post Top Ad

Tuesday, 14 April 2020

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 20ம் திகதி வரை விளக்கமறியல்


பொலிசாரின் கடமைக்கு இடையூறாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.


ஊரடங்கு சட்டத்தை மீறியதாகவும் அவர் மீது மேலதிகமாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீரிஹன பொலிசாரால் கைது செய்யப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க, இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a comment