போலி தகவல்களை பரப்பிய 16 பேர் இதுவரை கைது! - sonakar.com

Post Top Ad

Monday, 13 April 2020

போலி தகவல்களை பரப்பிய 16 பேர் இதுவரை கைது!

File photo

கொரோனா சூழ்நிலையில் போலியான தகவல்களைப் பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்டு இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரு தினங்களில் மாத்திரம் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் கட்டுகஸ்தொட்ட, பெலிகல, வெலிமட, கடவத்தை, ராகம மற்றும் நொச்சியாகம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, போலி தகவல்களைப் பரப்புபவர்களைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி குறிப்பிட்ட குழுவினரை மாத்திரம் கைது செய்வது அநீதியானது என ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a comment