ஆட்சியில் 'திருப்தியில்லை' : இக்கட்டில் ஜனாதிபதி - sonakar.com

Post Top Ad

Friday, 6 March 2020

ஆட்சியில் 'திருப்தியில்லை' : இக்கட்டில் ஜனாதிபதி


கடந்த 100 நாட்கள் தனது தலைமையின் கீழ் உள்ள ஆட்சியில் தான் திருப்தியைக் காணவில்லையென்கிறார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.


ஊடக பிரதானிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் இதனை சரி செய்வதற்கு முயற்சியெடுக்கப் போவதாகவும் தற்போதைய நிலையில் பலர் அதிருப்தியுடனேயே தமது பதவிகளில் இருந்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும், தான் தன்னாலான நியமனங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் அரச திணைக்களங்களுக்கு இராணுவ அதிகாரிகளை பிரதானிகளாக நியமித்ததை தவறு காண முடியாது எனவும் தெரிவிக்கிறார்.

தமது 'கொள்கைகளுக்கு' ஏற்ற அரசொன்றை அமைப்பதற்கே தாம் முயற்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்ற அதேவேளை பொதுத் தேர்தலில் பெரமுன வெற்றி பெற்றால் மஹிந்த ராஜபக்சவே முழு அதிகாரமுள்ள தலைவராவார் என எதிர்பார்ப்பு நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment