வெலே சுதாவுக்கு பணம் கொண்டு சென்ற நபர் கைது - sonakar.com

Post Top Ad

Friday, 27 March 2020

வெலே சுதாவுக்கு பணம் கொண்டு சென்ற நபர் கைது


பூசா சிறையிலிருக்கும் மரண தண்டனைக் கைதி வெலே சுதாவிடம் கையளிப்பதற்காக 150,000 பணத்தினை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்ல முயன்ற நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.இலங்கையில் இடம்பெறும் போதைப் பொருள் வர்த்தகத்தின் 65 வீதத்தினை வெலே சுதாவே கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த அதேவேளை சிறைச்சாலையில் இருந்து கொண்டே போதைப் பொருள் வர்த்தகத்தை நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பெருந்தொகை பணத்துடன் சென்ற நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a comment